Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ICCRankings…. #WI க்கு எதிராக அடித்த அடி….. 2ஆவது இடத்தில் இந்திய வீரர் SKY…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்..

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 19ஆவது ஓவரில் 3 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்து வென்றது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடி தந்தார். சமீப காலமாகவே இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.. ஏபிடி வில்லியர்ஸை போலவே மைதானத்தில் எந்த திசையிலும் சிக்சர் அடிக்கும் திறமை இவருக்கு இருக்கிறது.. நடந்து முடிந்த ஐபிஎல்லில் கூட சிறப்பாக ஆடினார்..

இதை தான் நேற்றைய போட்டியிலும் நிரூபித்து காட்டியிருக்கிறார் சூரியகுமார் யாதவ்.. இவர் இப்படி சிறப்பாக ஆடி வருவது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.. ஏனென்றால் வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது.  சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதுவே இவருக்கு முதல் சதமாகும்..

இந்த நிலையில் தான்  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 பேட்டிங் தரவரிசையில் 816 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 44 பந்துகள் 76 ரன்கள் எடுத்ததன் காரணமாக 2ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதனால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்… பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது..

முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறார் அதேபோல மூன்றாவது இடத்தில் மற்றொரு பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 794 புள்ளிகளுடன் இருக்கிறார். முதல் டாப் 10 இடத்தில் இந்திய வீரர்கள் வேறு யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |