விநோத சவாலான ஐஸ் பக்கெட் சவாலுக்கு அறிமுகப்படுத்திய 34 வயதான பீட் ப்ராடிஸ் என்ற அமெரிக்கர் உயிரிழந்தார்.
அமெரிக்காவிலுள்ள போஸ்டன் எனும் பகுதியை சேர்ந்த பீட் ப்ராடிஸ் , அங்குள்ள கல்லூரி பேஸ்பால் அணியின் முன்னாள் வீரர் ஆவார். நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதுதொடர்பான மருத்துவ ஆய்வுக்கு நிதி திரட்ட 2014ம் ஆண்டு குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொள்ளும் வீடியோவை பதிவிட்டு வெளியிட்டார். அது வைரலானது .
அதனை தொடர்ந்து பிரபலங்களான டாம் க்ரூஸ், ஸ்டீவன் ஸ்பில்பர்க், பில் கேட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வில்லியம் புஷ் ஆகியோரும் அந்த சவாலில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நோயின் தாக்கம் அதிகரித்து பீட் ப்ராடிஸ் உயிரிழந்தார். இந்தத் தகவல், அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது