அண்டார்டிகா கண்டத்திலிருந்து மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று பிரிந்து வெடெல் கடலில் மிதப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முழுவதும் பனிப்பாறைகள் மற்றும் பனிமலைகளையுடைய குளிர்பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் பல நாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு கூடங்கள் அமைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, இக்கண்டத்திலிருந்து, சுமார் 4320 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 175 கி.மீ நீளம் மற்றும் 25 கிலோமீட்டர் அகலம் உடைய மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று பிரிந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Meet the new cool kid on the iceberg block: the recently calved #A76 is now the biggest iceberg in the world!
The iceberg was spotted by @BAS_News and confirmed from @usnatice using @CopernicusEU #Sentinel1 imagery.
Here's how it looked on 16 May👇https://t.co/GgFk6kIJLv pic.twitter.com/xOVWjidsZw— ESA Earth Observation (@ESA_EO) May 19, 2021
அதாவது இந்த தகவல்கள் கோப்பர்நிகஸ் செண்டினல்-1 செயற்கைக்கோள், புகைப்படங்கள் அனுப்பியதை வைத்து உறுதியாகியுள்ளது. மேலும் இந்த பனிப்பாறையானது, அமெரிக்காவின் நியூயார்க் நகரை காட்டிலும் சுமார் 4 மடங்கு பெரியதாகவுள்ளது என்றும் கூறியுள்ளனர். அதாவது நியூயார்க் நகரின் மொத்த பரப்பளவு 1,213 சதுர கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானிகள் இந்த பனிப்பாறையை ஏ-76 என்று அழைக்கின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்தப் பனிப்பாறையானது, வெடெல் கடலில் மிதக்கத் தொடங்கிவிட்டது. இதனால் பருவநிலை மாற்றம் ஏதும் ஏற்படாது என்றும், சிறிது காலத்திற்கு பிறகு அது, மேலும் சில துண்டுகளாகப் பிரிந்து செல்லும் என்றும் கூறியுள்ளனர்.