Categories
அரசியல் மாநில செய்திகள்

செம ட்விஸ்ட்… சின்னம் முடக்கம்… ஆபத்தில் ADMK…. ஓடோடி வந்த MGR கால தொண்டர்கள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி,  ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்திற்கு செல்வார். உச்சநீதிமன்றத்திற்கு அடுத்து தேர்தல் ஆணையத்திற்கு போகும். தேர்தல் ஆணையத்தில் பிளவை நோக்கி அண்ணா திமுக போகும். அப்போ சின்ன முடக்கப்படும், கட்சி முடுக்கப்படும்,  கொடி முடக்கப்படும். அந்த ஆபத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், உடனடியாக நாங்கள் களத்தில் இறங்கி, ஒன்றுபட்ட அண்ணா திமுக தேவை. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமை சேவை.

சாதி வாரியாக, மண்டல வாரியாக, இன்றைக்கு ஒரு பிளவை நோக்கி அண்ணா திமுக சென்று கொண்டிருக்கிறது. அது தடுக்கப்பட வேண்டும், தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் எல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் சின்ன பள்ளிக்கூடம் படிக்கின்ற காலத்திலேயே திமுகவிற்கு எதிராக போராடி இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்து வந்தவர்கள். அண்ணா திமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுகின்ற முதலமைச்சராக இருக்கின்ற காலத்திலே,

எதிர்த்து எங்களுடைய கருத்துகளையும், என்னுடைய எதிர்ப்புகளை நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையத்தில் அனைத்திலும்  வைத்து வந்தவன் நான். அதனால் இவர்களை கண்டெல்லாம் எனக்கு எந்த அச்சமும் கிடையாது. அதாவது இந்த கட்சியில் ஓபிஎஸ்ஸா – இபிஎஸ்ஸா  என்று கட்டமைப்பதே தவறு. ஓபிஎஸ் இதில் யாரு ? எம்ஜிஆர் காலத்தில் இருந்து இருப்பவர். நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரோடு நான் பயணித்திருக்கிறேன்.

எம்.ஜி.ஆர் அவர்களிடம் நம்பி, அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். அந்த வரலாறு இவர்களுக்கு இருக்கா ? ஓபிஎஸ்யை நம்பி, அண்ணா திமுகவிற்கு யாரும் வரவில்லை. எம்ஜிஆர்யை  நம்பி அண்ணா திமுகவில் வந்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை நம்பி அண்ணா திமுகவிற்கு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அண்ணா திமுக தொண்டன் எம்ஜிஆர் புகழையும்,  ஜெயலலிதா அம்மா அவர்களின் புகழையும்,  இரட்டை இலை சின்னத்தை நம்பி தான் களத்தில் இருக்கிறார்கள்.

Categories

Tech |