பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவமனையின் ICU-வில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த கொடிய வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பிரிட்டனின் Nottingham நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா ICU பிரிவில் நோயாளிகள் ஒருவர்கூட இல்லாத புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த மருத்துவமனையின் ICU பிரிவில் பணிபுரியும் மார்க்ஸ் என்பவர் அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ICU பிரிவில் கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை. இதனை குறிக்கும் வகையில் வெள்ளை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்ஸ் கூறிய போது, ” கொரோனா வைரஸ் அதிகமாக பரவிய காலத்தில் மூன்று ICU-க்கள் இங்கு உருவாக்கப்பட்டது. அதில் இரண்டு ICU -க்கள் முன்னரே மூடப்பட்டது. தற்போது மூன்றாவது ICU -வில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் குணமாகி நேற்று மருத்துவமனையில் சென்று விட்டனர்” என்று கூறியுள்ளார்.
COVID ICU, QMC @nottmhospitals pic.twitter.com/WE9n9pV1iu
— Mark Simmonds (@mjrsimmonds) March 24, 2021