Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நான் கொடுத்த பணத்தை தாங்க…. வாலிபருக்கு ஏற்பட்ட நிலை…. கைது செய்த காவல்துறையினர்….!!

இடப் பிரச்சினையில் இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ராஜ்குமார் அக்கல்நாயக்கன்பட்டியில் வசிக்கும் பாண்டித்துரை என்பவருக்கு சொந்தமான இடத்தை புதூரில் வசிக்கும் ஜான் என்பவருக்கு கிரயம் பேசி 6 லட்ச ரூபாய் முன் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் பாண்டித்துரை இதுவரை இடத்தை விற்பதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்காத காரணத்தால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜ்குமார் அவரிடம் கொடுத்த முன்பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

இதனால் மிகவும் கோபமடைந்த பாண்டித்துரை தனது நண்பரான பசுபதியுடன் ராஜ்குமாரின் அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதில் ராஜ்குமாருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் ராஜ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டித்துரை மற்றும் பசுபதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |