ஒரே ஆம்புலன்ஸில் 10 கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்லப்படுவதாக அனைத்து இந்திய சட்ட கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுப்பேருந்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தும் தமிழக அரசு, கொரோனா நோயாளிகள் பத்து பேரை ஒரே ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி செல்வது அரசின் அலட்சியத்தையே காட்டுவதாக, அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் திரு கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.