Categories
உலக செய்திகள்

நாங்க எங்க போவோம்…. இடம் இன்றி தவிக்கும் பாலஸ்தீனிய மக்கள்…. விரட்டும் இஸ்ரேல் அதிகாரிகள்…!!

எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்த இஸ்ரேல் அதிகாரிகளால் பாலஸ்தீனிய பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இஸ்ரேல் நாட்டில் வடக்கு ஜோர்டன் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அந்த பள்ளத்தாக்கில் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடுகள்  சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என இஸ்ரேல் அதிகாரி கூறி அதனை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு வசித்து வரும் 35 குழந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முன்னர் பல மாதங்கள் அந்த கிராம மக்களிடம் இது குறித்து பேசியுள்ளதாகவும் மாற்று இடத்தை வழங்குவதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வடக்கு ஜோர்டன் பள்ளத்தாக்கு பகுதியானது 1990ல் ஏற்கப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் இஸ்ரேலின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலில் இருந்து வீடு கட்ட அனுமதி பெறுவது என்பது நடக்காத நிகழ்வாகும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |