யானை தந்தத்தினால் செய்யப்பட்ட சிற்பத்தின் பாகம் கிடைத்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகில் மளிகை மேடு பகுதியில் தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் மார்ச் 25ஆம் தேதி மண்ணால் ஆன கெண்டி செம்பின் மூக்கு பகுதி, பழங்கால மண் பானை மற்றும் 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் யானை தந்தத்தினால் செய்யப்பட்ட மனித உருவ சிற்பத்தின் பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் பாகம் இடுப்பில் கீழ் பகுதியில் இருந்து கால்கள் வரை உள்ளது.
மேலும் அதன் உயரம் 1.8 செ.மீ, அகலம் 1. 5 செ.மீ, எடை 1 கிராம் 100 மில்லியும் கொண்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் சோழர்களின் கலையை பின்பற்றி இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிற்பத்தில் ஆடை அலங்காரங்கள், அணிகலன்கள் போன்ற அமைப்புகளும் இடம்பெற்றுள்ளது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பணி இம்மாதம் இறுதி வரை நடைபெறுவதாகவும் தொல்லியல் துறை இன்னர் தெரிவித்துள்ளனர்.