தனியார் வங்கி ஃபிக்சட்டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
IDFC வங்கியானது ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்த அதிகரித்துள்ள வட்டி விகிதமானது ஜூலை 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிகரித்துள்ள வட்டி விகிதங்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி 7 நாட்கள் முதல் 15 வருடங்கள் வரை உள்ள பிக்சட் டெபாசிட்களுக்கு 3.50% முதல் 6% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனைடுத்து 1 நாள் (அ) 4 வருடங்களில் முடிவடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.50 சதவீதமும், 7 முதல் 29 நாட்களுக்கு இடைப்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 3.50 சதவீதமும், 90 நாட்களுக்கு இடையில் உள்ள பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 4 சதவீதமும், 91 முதல் 81 நாட்களுக்குள் முடிவடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 4.50 சதவீதமும், 181 நாட்களுக்கு ஒரு வருடத்தில் 5.75 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதன் பிறகு 1 வருடம் முதல் 3 வருடங்களுக்குள் முடியும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவீதமும், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்குள் முடிவடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6.50 சதவீதமும், 5 முதல் 10 வருடங்களுக்குள் முடிவடையும் பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இந்த வட்டி விகித உயர்வானது மூத்த குடி மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்டதாக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மற்றவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட மூத்த குடிமக்களுக்கு சற்று கூடுதலாக வட்டி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.