Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்தது…!!!

பாகிஸ்தான் நாட்டில் பனிப்பாறை உருகியதில் வெள்ளை பெருக்கு உண்டாகி ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ஹன்சா பள்ளத்தாக்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் 20 நாட்களாக அதிக வெப்பநிலை நிலவுகிறது. இதில் பனிமலைகள் உருகிவிட்டது. அதனைத்தொடர்ந்து, ஷிஸ்பர் ஏரியின் நீர் அளவானது 40 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது.

ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீரோடையில் நீர் அதிவேகத்தில்  வெளியேறியது. இதனால், ஹசனாபாத் நகரில் இருக்கும் ஆற்றுப்பாலம் இடிந்தது. இதேபோன்று மேலும், 33 ஏரிகள் எந்த சமயத்திலும் நிரம்பி வழியக்கூடிய நிலையில் இருக்கின்றன.

Categories

Tech |