Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…. பெற்ற பிள்ளையை சடலமாக மீட்ட தந்தை…. பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் ப்ளோரிடா..

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரரின் குழந்தை, இடிந்து விழுந்த 12 அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவில் 12 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த 12 அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 22 பேரை மீட்பு பணி வீரர்கள் சடலமாக மீட்டுள்ளார்கள்.

இந்நிலையில் தொடர்ந்து 9-ஆவது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில் மேலும் 2 சடலங்கள் கிடைத்துள்ளது. அந்த சடலத்தில் ஒன்றான 7 வயது சிறுமி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரரின் குழந்தை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த தீயணைப்பு வீரர் தன்னுடைய குழந்தையின் உடலின் மீது தேசியக் கொடியை போர்த்தி மரியாதை செலுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |