இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மீட்புபணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜார்ஜியாவில் Batumi என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிந்த Adjara பகுதியின் தலைவர் Tornike Rizhvadze மற்றும் சுகாதார அமைச்சரான Nino Nizharadze சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மீட்புக்குழுவினர் மற்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பொதுமக்களையும் வெளியேறி வருகின்றனர்.
https://twitter.com/i/status/1446443388761423872
இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில் மருத்துவ சேவை மற்றும் தீயணைப்பு வீரர்கள் குவிந்துள்ளனர். அதிலும் மீட்புக்குழுவினர் சக்தி வாய்ந்த இயந்திரங்களைக் கொண்டு கட்டிட இடிபாடுகளை அகற்றி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும் கட்டிட இடிபாடுகளில் குழந்தைகள் உட்பட பலர் சிக்கி இருக்கக்கூடும் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதிலும் அடுக்குமாடி கட்டிடம் எவ்வாறு இடிந்து விழுந்தது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்த செய்திகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.