Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி ,தோசைக்கேற்ற  சூப்பரான வெங்காய சட்னி !!!

இட்லி ,தோசைக்கேற்ற  சூப்பரான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி –  1
பூண்டு –   2  பல்லு
வற்றல் – காரத்திற்கேற்ப
இஞ்சி – 1  துண்டு
கடுகு – 1/4  தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி

உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு
வெங்காயச் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, வற்றல் ,இஞ்சி , உப்பு  மற்றும்   பூண்டு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பின்னர்  ஒரு  கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து, பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதை  சேர்த்து,  வதக்கி எண்ணெய் தெளிய  இறக்கினால் சுவையான  வெங்காய சட்னி தயார் !!!

Categories

Tech |