Categories
மாநில செய்திகள்

“ஒரு நூலகம் திறந்தால் ஒரு சிறைச்சாலை மூடப்படும்”…. சான்றோர் வாக்குகேற்ப சிறைகளில் நூலகம்…. கோர்ட் கேள்வி….!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சகா. இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 135 மத்திய சிறைகள் இருக்கிறது. அதன் பிறகு பெண்களுக்காக 3 சிறப்பு சிறைகளும், பெண்களுக்காக 10 துணை சிறப்பு சிறைகளும், 103 துணை சிறைகளும், 7 சிறப்பு துணை சிறைகளும் இருக்கிறது. இதில் பெரும்பாலான சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததோடு வெளிச்சமின்மை மற்றும் காற்றோட்டம் இன்றியும் இருக்கிறது.

அதன் பிறகு சிறை கைதிகளுக்கான விதிகளின்படி பெரும்பாலான சிறைகளில் நூலகங்களும் இல்லை. எனவே நூலகங்கள் இல்லாத அனைத்து சிறைகளிலும் நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக உள்துறை செயலாளர்  2 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்பது சான்றோர் வாக்காகும்.

Categories

Tech |