செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாவர்க்கர் வீரனா ? வீரர் என்றால் பகத்சிங் மாறி தூக்கில் தொங்கியவன் தான் வீரன், சுபாஷ் சந்திர போஸ் போல் நாட்டிற்கு ராணுவம் கட்டி போராடிய புரட்சியாளர்களாக இருக்க வேண்டும். நீங்கள் இரண்டு முறை என்னை மன்னித்து வெளியே விட்டீர்கள் என்றால், நான் கடைசி வரை விஸ்வாசமாக இருப்பேன் என்று எழுதிய கடிதம் இருக்கிறதா? இல்லையா? நீயெல்லாம் என்ன வீரன் ?
மன்னிப்பு கடிதம் கொடுத்தால் வெளியே விடுவேன் என்று சொன்னபோது, பகத்சிங் மன்னிப்பு கடிதம் தர முடியாது என்று தூக்கு கயிறை முத்தமிட்ட பகத்சிங் வீரரா? சவர்க்கர் வீரரா? நீங்கள் வரலாற்றை திணிக்காதீர்கள், ஒரு தலைமுறைக்கு தப்பாக வரலாற்றை பதிவு செய்யாதீர்கள். அதிமுக விவகாரத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மாறி மாறி வெற்றியை கொண்டாடுவது, அது அவர்களுடைய வெற்றி, அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
எனக்கும் கூட இனிப்பு கொடுத்தால் நான் வாங்கி, சாப்பிட்டுட்டு போவேன், அதற்கு ஒன்றும் இல்லை. நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனையானதை நீங்கள் இவ்வளவு நேரம் கேட்டீர்கள் நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், மக்களுக்கு பிரச்சனையானதை சொல்லுங்கள், அது அவர்களுடைய கட்சி பிரச்சனை, நாட்டு பிரச்சனை கிடையாது, அது மக்களுக்கான பிரச்சனையும் கிடையாது. அது அவர்கள் பஞ்சாயத்து என தெரிவித்தார்.