Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறிகுறி இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமை…. நேற்று அறிவிப்பை வாபஸ் பெற்ற மாநகராட்சி…!!

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டும் தான் தனிமைப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்த உதவி சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை சென்னை மாநகராட்சி பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருமே, 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை என்பது பொதுவானது. நிறைய பேரிடம் பரிசோதனை மேற்கொண்டு வரும் முடிவுகள் மூலம்தான் கொரோனா நோயாளியை கண்டுபிடிக்க முடியும். பரிசோதிக்கும் அனைவரையுமே தனிமைப் படுத்தினால், அவர்களைத் தனிமைப்படுத்தி வைக்க இடம் காணாது என பல்வேறு சமூக ஆர்வலர்கள் இது குறித்து விவாதம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்று மறு அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே, 14 நாள்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும். பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வரும் பட்சத்தில், அவர்களை தனிமைப்படுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது.

Categories

Tech |