Categories
சினிமா தமிழ் சினிமா

“பாஜக சீட் கொடுத்தால்”…. கண்டிப்பாக எம்.பி தேர்தலில் போட்டியிடுவேன்…. நடிகை கங்கனா ரணாவத் அதிரடி….!!!!!

பாலிவுட் சினிமால் வில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி பகுதியைச் சேர்ந்தவர். அடுத்த மாதம் 12-ம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது.  நடிகை கங்கனா  பாஜகவுக்காக ஆதரவு கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டி கொடுத்தார். அப்போது தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா என்று கங்கனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, என்னுடைய சொந்த மாநிலத்தின் மக்களுக்காக உழைக்கிற வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதில் எனக்கு பெருமை தான்.

நான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அரசு என்னுடைய பங்களிப்பை விரும்பினால் கண்டிப்பாக நான் பணி செய்வதற்கு ரெடியாக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்பி பாஜக எனக்கு சீட் கொடுத்தால் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன். ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் ஹிமாச்சல் பிரதேசத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்கள். ‌ எங்களுடைய மாநிலத்தில் மக்கள் இலவச சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதுடன், காய்கறிகளையும் சொந்தமாக விளைவிப்பதால் இலவச திட்டங்கள் அங்கு எடுபடாது.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு மிகப்பெரிய தலைவர். ஆனால் அவரும் ராகுல் காந்தியும் எதிரெதிர் அணியினர் என்பதுதான் வருத்தம் தரக்கூடிய விஷயம். ஒரு வருடம் கூட டுவிட்டர் நிறுவனத்தால் என்னை சகித்துக் கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராமிலும் அதே நிலை தான். நான் 3 முறை எச்சரிக்கைகளை பெற்று விட்டேன். ஆனால் இப்போது எல்லா பிரச்சனையும் சரியாகி விட்டது. நான் மீண்டும் சமூக வலைதளம் பக்கம் வந்தால் மக்களுக்கு சுவாரசியமாகவும், என்னுடைய வாழ்க்கை பிரச்சினையாகவும் மாறிவிடும். மேலும் என்னுடைய கணக்கு புதுப்பிக்கப்பட்டால் கண்டிப்பாக நிறைய மசாலா செய்திகள் கிடைக்கும் என்று கூறினார். ‌

Categories

Tech |