Categories
அரசியல் மாநில செய்திகள்

லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை: அமைச்சர் அதிரடி பேட்டி… தமிழக அரசு சூப்பர் முடிவு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு   நடைபெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும்…  அரோகரா கோஷம் தான் எங்கும் எதிரொலித்ததே தவிர…  ஐயோ அம்மா என்கின்ற கோஷம் எங்கும் எதிரொலிக்காத வகையில் அந்த நிகழ்வு நடந்தேறியது.

அதேபோல் திருவண்ணாமலையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு…  25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினாலும்…. சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் முறையாக செய்து தரப்பட்டு, குப்பையே எங்கும் இல்லாமல்  சுகாதார சீர்கேடு இல்லாமல்….

எப்படி நம்முடைய அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற மகிழ்ச்சி கேட்டதோ அதேபோல் அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோவிலிலும் அதே மகிழ்ச்சியோடு பக்தர்கள் வந்து செல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் ஏகாதசியை காண இருக்கின்ற அந்த திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள கூட்ட நெரிசல் ஏற்படாமல்….

நெரிசலில் எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் காப்பதற்கு உண்டான  நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் சிற்றறிக்கையும் அனுப்ப உள்ளோம்.செய்ய முடியாததை எல்லாம் செய்து காட்டுகின்ற அரசுதான் மாண்புமிகு  தமிழக முதல்வரின் உடைய அரசு.

செய்ய முடியாததை எல்லாம் செய்து காட்டுகின்ற அரசுதான் மாண்புமிகு  தமிழக முதல்வரின் உடைய அரசு. அதுபோல் எங்காவது இப்படி கையூட்டு பெறுகின்ற ஆதாரம் தந்தால்,  நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.  தவறுகளை களைவது என்பது ஒரு புறம், தவறுகள் வராமல் தடுப்பது என்பது ஒரு புறம்..

நிருபர் உடைய இந்த கேள்வியை மனதிலே வைத்து,  தவறு நடைபெறாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கை,  எடுக்க வேண்டுமோ ? அந்த நடவடிக்கை எடுப்போம். கூடிய விரைவில் நானும் – துறையினுடைய ஆணையாளர் – செயலாளர் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு ஏகாதசிக்கு முன்பாக சென்று,  இதே போல் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றோம். நிச்சயம் தவறு நடக்காமல் இருப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை  செயல்படுவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |