நாமக்கல் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரியாக இருந்த காந்தி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிதாக சுரேஷ் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரியாக பணியாற்றி வந்த காந்தி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக சுரேஷ்(35) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று நாமக்கல் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்டத்தில் குற்றங்கள் தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கள்ள சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் தேவையின்றி குற்றத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை கடுமையாக்கப்படும் என கூறியுள்ளார். தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக நாமக்கல் மாவட்டம் முழுவதிலும்1000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் குற்றங்கள் செய்தவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.