Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்.‌…. பெற்றோருக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை…. புதிய அரசாணை வெளியீடு…..!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இந்த சட்டத்தை தற்போது தமிழகத்தில் நிறைவேற்றி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளனர். இந்த அரசாணை கடந்த புதன் கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் பல்வேறு விதமான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளது.

அதன்படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் மட்டும் இன்றி சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்யலாம். இந்த அதிகாரம் போக்குவரத்து துறையின் கீழ் வரும் சோதனை சாவடிகளுக்கு பொருந்தாது. இதனையடுத்து சாலையில் செல்லும்போது வாகனங்களை ஒட்டிக்கொண்டே செல்போன் பேசினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், உரிய ஆவணங்கள் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு 500 ரூபாயிலிருந்து 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றி சென்றால் 20 ஆயிரம் அபராதமும், வாகனங்களில் செல்லும்போது செல்போன் ஒட்டிக்கொண்டே வண்டி ஓட்டுபவர்களுக்கு முதலில் 1000 அபராதமும், அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 அபராதமும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் 10,000 அபராதமும் விதிக்கப்படும். 18 வயசுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோருக்கு 3 வருடம் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் இந்த சட்டம் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |