Categories
உலக செய்திகள்

கொரோனா அறிகுறி உடனே தென்படாது – பீதியை கிளப்பும் சீனா …!!

அறிகுறி ஏதும் இன்றி கொரோனா தொற்று பாதிக்கப்படுவது ஆபத்து நிறைந்தது என சீன தேசிய சுகாதாரக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். 

சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் 6764 நோயாளிகளில் 1297 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும் சீன தேசிய சுகாதார குழு தலைவர் மீ பென்ங் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஐந்தில் நான்கு நோயாளிகளுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மிகப்பெரிய தடையாக அமைந்துவிடும்.

அத்துடன் அறிகுறிகள் ஏதும் தெரியாமல் இருந்தால் தொற்று பரவுவது அதிகமாகி அது விரிவடைய காரணமாகவும் அமைந்து விடும். இதன் காரணமாக பொதுமக்களை பரிசோதனை செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்

Categories

Tech |