டிடிவி தினகரன் அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைக்க பரிசீலிக்கப்படும் என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் என்ன நடக்கும் என்று பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அதிமுகவில் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். சசிகலாவின் விடுதலைக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேபி முனுசாமி, “டிடிவி தினகரன் அதிமுகவினரிடம் வந்து மன்னிப்பு கேட்டால் அதிமுகவில் இணைப்பது பற்றி பரிசீலிப்போம்” என்று தெரிவித்துள்ளார். இது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் அவை அதிமுக ஆட்சியை மீட்கத்தான் அமமுக கட்சியை தொடங்கினோம் என்று டிடிவி தினகரன் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.