கணவர் சினிமாவில் இருந்து விலகி விடு என்று கூறினால் நிச்சயம் விலகி விடுவேன் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், கமல், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது பாரிஸ் பாரிஸ், சினாமிகா, இந்தியன்2, ஆச்சர்யா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சல் என்பவரை திருமணம் செய்தார். அதற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் மூலமாக ரசிகர்களிடம் கலந்துரையாடிய நடிகர் காஜல் அகர்வாலிடம் சினிமாவை விட்டு விலகுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் இன்னும் எவ்வளவு காலம் சினிமாவில் இருப்பேன் என்று தெரியவில்லை.
தற்போது எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆதரவாக இருக்கின்றனர். ஒருவேளை எனது கணவர் சினிமாவில் இருந்து விலகி விடு என்று கூறினால் நான் நிச்சயம் விலகி விடுவேன். தற்போது ஒப்பந்தமாகி உள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்