ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பேசிய இயக்குநர் கௌதமன், எங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு, எங்கள் தாய் மொழியை அழித்து, ஹிந்தி மொழியை திணிக்க, இன்னைக்கு கங்கணம் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கின்ற கூட்டங்களுக்கு நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன்… உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ மொழி, அதிலிருந்து உயிர் எழுத்து இருக்கலாம், மெய் எழுத்து இருக்கலாம், தமிழ் மொழியிலும் அது உண்டு. ஆனால் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் மொழியில் மட்டும் தான் ஆயுத எழுத்து இருக்கிறது என்பதை நீங்கள் மறந்திட கூடாது.
கபடி என்கின்ற விளையாட்டு உலகத்தில் வேறு யாரிடமும் இல்லை. இன்னைக்கு வேண்டுமானால் பல இனங்கள் விளையாடலாம், பஞ்சாபில் கூட இன்று விளையாடுறாங்க. ஆனால் இந்த கபடி என்கின்ற விளையாட்டு தமிழ் இனத்தில் தோன்றிய, தமிழினத்தின் ஒரு ஆதி விளையாட்டு. கற்பனை பண்ணி பாருங்க.. நடுப்புறம் ஒரு கோடு, அது எல்லை கோடு. நீங்க எல்லையைத் தாண்டி எவன் வந்தாலும், அத்துமீறி உள்ள வந்தால், எங்கள் மண்ணுக்குள், எங்கள் எல்லைக்குள், எங்கள் நிலத்திற்குள், எவன் வந்தாலும் அவனை தூக்கி போட்டு மிதித்து,
அவன் மூச்சை நிறுத்து என்கின்ற போர் ஒத்திகைகாண விளையாட்டு. விளையாட்டில் கூட யுத்தத்தை கற்றுத் தந்தவன் தமிழன். அப்படிப்பட்ட நாங்கள், இழந்தது இந்த உலகத்தில் வேறு எந்த இனமும் இழக்காத… ஒரு பேரிழப்பு. எல்லாம் இழந்து நிற்கின்ற நிலையில் கூட, நாங்கள் தலையில் இருக்கின்றோம். இந்திய ஒன்றிய வரைபடத்தில் நீங்க காலடியில் கிடக்கிறீங்க என மிதித்து கிட்டே இருந்தா ஒருபோதும் நாங்கள் தொடர்ந்து வேடிக்கை பார்க்க மாட்டோம் என எச்சரித்தார்.