கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகை வித்யா மோகன். இவர் தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த வள்ளி நெடுந்தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வித்யா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய தாலி எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய கணவர் எனக்கு முதன்முதலாக போட்ட செயின் அது. ஆகவே எனக்கு அது ரொம்ப சென்டிமென்ட். அதை எந்த காரணத்தை கொண்டும் கழட்ட மாட்டேன். இதை நான் நடிக்கும் சீரியல்களிலும் ஸ்ட்ரிக்டாக கூறியுள்ளேன். ஒருவேளை தாலியை கடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக அந்த ப்ராஜெக்டை ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு நடிகையாக இருந்துவிட்டு நடிக்கும் போது கூட தாலியை கழட்ட மாட்டேன் என்று வித்யா மோகன் கூறியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவரை பாராட்டியும் வருகின்றனர்.