Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! மறுபடியும் முதல்ல இருந்தா…. ஆதிபுருஷ் படத்தை ரீ சூட் செய்யும் படக்குழு?…. அட என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் கேஜிஎப் இயக்குனரின் இயக்கத்தில் சலார் மற்றும் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதி புருஷ் திரைப்படம் ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளானது.

அதன் பிறகு படத்தின் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக இருப்பதாக பலரும் நெகட்டிவ் கமாண்டுகளை குவித்தனர். இதன் காரணமாக படத்தின் டீசரை திரையரங்குகளில் பார்த்தால்தான் மிகவும் சிறப்பாக இருக்கும் என படக் குழு கூறினர். இந்நிலையில் பட குழு படத்தை திரையிட்டு பார்த்ததில் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக இருப்பது அவர்களுக்கே தெரிந்துள்ளதாம். இதன் காரணமாக படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் சில காட்சிகளை மீண்டும் ரீசூட் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பிறகு ஜனவரி 12-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர். அதன்படி அடுத்த வருடம் ஜூன் 16-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ராமாயண காப்பியத்தை மக்களுக்கு சிறந்த முறையில் கொடுப்பதற்காகவும் 6 மாதம் கடந்தால் மக்கள் தற்போது வரும் நெகட்டிவ் கமாண்டுகளை மறந்து விடுவார்கள் என்பதற்காகவும் தான் ரிலீஸ் தேதியை  மாற்றி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |