கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கோவிலில் இருக்கும் சாமிகளுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் நாம் கதறுவதை பார்த்து அந்த சாமியே இரக்கப்பட்டு கோவிலிடங்களில் நீண்ட நாட்களாக குத்தகைக்கு இருப்பவர்களுக்கு பட்டா வழங்கியிருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
கோவில் நிலத்தில் ஒரு சென்டின் நிலம் கூட யாருக்கும் பட்டா கொடுக்கக் கூடாது என நீதிபதி கூறுவதற்கு என்ன அருகதை இருக்கிறது ? என கடுமையாக சாடிய கே பாலகிருஷ்ணன், இதுபோன்று அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது நீடித்தால், வரும் காலங்களில் தலைமுடி என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை கூட நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என விமர்சித்தார்.