சுந்தர்.சி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
சுந்தர். சி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ‘அரண்மனை3’ திரைப்படம் வெளியானது. இவர் முன்னணி நடிகையான குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், இவர் சமீபத்திய பேட்டியொன்றில், என்னுடைய வாழ்க்கையில் குஷ்பு வரவில்லை என்றால், நான் நடிகை சௌந்தர்யாவுக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் எனவும், ஒருவேளை அவரை திருமணம் செய்திருந்தால், என்னோடு உயிரோடு இருந்திருப்பார் என நான் பலமுறை குஷ்புவிடம் சொல்லி இருப்பதாக தெரிவித்தார்.