Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு……மு.க.ஸ்டாலின் கருத்து….!!

கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பொள்ளாச்சியில் நடத்த பாலியல் விவகாரத்தை பற்றி பேசும்போது, தி.க.தலைவர் கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்நிலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.க.வினர் மீது இந்து அமைப்பினர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இது பெரும் பரபரப்பானது. இந்நிலையில் கி.வீரமணி சர்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி முக.ஸ்டாலின் கூறும்போது,   கி..வீரமணி, கிருஷ்ணர் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சு அல்ல, அது பெரியார் திடலில் பேசிய பேச்சு. கிருஷ்ணர் பற்றி கேவலப்படுத்தி, கொச்சைப் படுத்தி, பேச வேண்டும் என்று அப்படிப் பேசவில்லை. சில உதாரணங்களைச் சொல்லி அவர் பேசி இருக்கிறார். அதை, சில ஊடகங்கள், RSS போன்ற அமைப்புகள் தவறாகச் சித்தரித்து மக்களிடம் தவறானப் பிரசாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டு செய்திருக்கும் சதி . இது உண்மையல்ல, அப்படி உண்மையாக இருந்திருந்தால் தவறு என்றுதான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

திமுகவை பொறுத்தவரை, அண்ணாவின் கொள்கையான ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதாகும். கலைஞர் கூட ’பராசக்தி’ படத்தின் வசனத்தில் தெளிவாகக் கூறியிருப்பார், ‘கோயில்கள் கூடாது என்று அல்ல, கோயில்கள் கொடியவர்கள் கூடாரமாக மாறி விடக்கூடாது என்று. இதுதான் எங்கள் கொள்கை. திமுகவில் 90 சதவிகித தொண்டர்கள் இந்துக்கள் தான் . இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய துணைவியார் கூட ஆலயங்களில் சென்று வழிபட்டுகொண்டு தான் இருக்கின்றார். ஏன் கோயிலுக்கு செல்கிறீர்கள் என்று நான் ஒரு போதும் கேட்டதில்லை. அதனால் வீரமணி விவகாரம், திட்டமிட்டு, வேண்டு மென்ற நடக்கிற போய் பிரசாரமே தவிர வேறொன்றுமில்லை’’ என்றார் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |