Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் மன்னிப்பு கேட்டால் என் கருத்தை திரும்ப பெறுகிறேன்…..ராஜேந்திர பாலாஜி பேட்டி…!!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்டால் நான் கூறியதை திரும்ப பெறுகிறேன்  என்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி ,சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலைப் போலவே இந்த 4 தொகுதிகளிலும் 5 முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது , சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் எனவும் சாடினார் .

கமலின் இந்த பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு இந்து அமைப்புகளை கண்டனத்தை  தெரிவித்தனர். அதே போல அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். இது தொடர் வார்த்தை போராக மாறியது. ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்து அவரின் பதவி பிராமண உறுதி மொழியை மீறுவதாக இருப்பதாகவும் ,  அவர் அமைச்சர்  பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்டல் நான் கூறிய என்னுடைய கருத்தை திரும்பப் பெறுகிறேன். நடிகர் கமல்ஹாசனின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்தை தூண்டி விடும் வகையில் கமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

 

Categories

Tech |