Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்க இல்லன்னா…. இங்க வச்சி பிடிச்சி கொடிய தூக்கிறலாம்…. ஸ்கெட்ச் போட்ட போலீசார்…!!

காரில் இருந்து அதிமுக கொடியை நீக்க சசிகலாவுக்கு நோட்டிஸ் தர போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவருடைய காரில் அதிமுக கட்சி கொடி இருந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெங்களூரில் இருந்து இன்று சென்னை திரும்ப உள்ள சசிகலா காரில் மீண்டும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் அதிமுக கொடி சசிகலா காரில் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் அவர் தமிழகத்திற்கு வரும் போது கைது செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக எல்லையான ஓசூரில் ஜூஜூவாடியில் அதிமுக கொடி அகற்ற சசிகலாவுக்கு நோட்டிஸ் தர போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவகாசம் வழங்கிய பிறகும் காரில் இருந்து கொடியை அகற்றாவிடில் அடுத்த வரவேற்பு இடத்தில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். முத்துமாரியம்மன் கோவில் அல்லது ஓசூர் பேருந்து நிலையம் அருகில் காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |