வதந்திகளை பரப்பாதீர்கள் என சிங்கமுத்து கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடிக்கு சிரிக்காத ரசிகர்களே இல்லை என கூறலாம். இதனையடுத்து, வடிவேலு என்னதான் சிறப்பாக காமெடி செய்தாலும் அவருடன் நடித்த காமெடி நடிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், இவரின் காமெடிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர் நடிகர் சிங்கமுத்து. இதனையடுத்து, சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களின் நட்பு ஒரே நிலத்தகராறில் மூலம் நட்புக்குள் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் ”வடிவேலு இல்லை என்றால் சிங்கமுத்து இல்லை” என செய்திகள் வெளியான நிலையில், இதற்கு, ”எனக்கு அப்படி ஒரு நிலைமை ஒருபோதும் வராது. மேலும், அவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த போதும் நான் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என சிங்கமுத்து பதிலளித்துள்ளார். மேலும், இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.