ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படவில்லை.
அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதிய போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் வெளியிட்டார். மேலும் அதில் பார்த்திபனுக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருப்பதாகவும் படம் 2024 ஆம் வருடம் வெளியாகும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில் நெறியாளர், “ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியானபோது நாங்கள் கொண்டாடவில்லை. அது எங்கள் தவறு தான் ஆனால் தற்போது கொண்டாட ஆரம்பித்திருக்கின்றோம். இதை பார்க்கும் போது ஒரு படைப்பாளியாக உங்களுக்கு என்ன தோன்றுகின்து?” என கேள்வி எழுப்பியதற்கு அவர் கூறியுள்ளதாவது ஒரு படைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காத போது நிச்சயம் அது வருத்தத்தை கொடுக்கும். அப்படித்தான் ஆயிரத்தில் ஒருவன். இத்திரைப்படம் ரிலீஸ் ஆனபோது கொண்டாடப்பட்டிருந்தால் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டு, மூன்று, நான்கு பாகம் என சென்றிருக்கும் எனக் கூறியுள்ளார்.