Categories
கிரிக்கெட்

புஜாரா இதை செய்தால்…. எனது ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறேன் – அஸ்வின் சவால்…!!

புஜாரா கிரீஸை விட்டு மேலேறி வந்து விட்டால் தன்னுடைய ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்வதாக தமிழக வீரர் அஸ்வின் சவால் விட்டுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத போதிலும் அறிமுக வீரர்கள் விளையாடி அபார வெற்றியை பெற்றனர். இது பலருடைய பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் தமிழக வீரர் அஸ்வின், “இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை புஜாரா மட்டும் கிரீஸை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் என்னுடைய ஒரு பக்கம் மீசையை  மழித்து கொள்கிறேன்” என சவால் விட்டுள்ளார். இந்த சவாலை ஏற்க புஜாரா தயாராக உள்ளாரா என்றும் கேட்டுள்ளார்.

Categories

Tech |