Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா ஏ2 குற்றவாளி என்றால்…. ஏ1 குற்றவாளி யாரு…? உதயநிதி சரமாரி கேள்வி…!!

சசிகலா ஏ2 குற்றவாளி என்றால் ஏ1 குற்றவாளி யார் என்று உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சசிகலா பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்துகொண்டிருக்கிறார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு அடைந்துள்ளது. இதையடுத்து சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று போலீஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நடைபெற்ற அரசியல் பிரச்சாரத்தில், “பெங்களூரிலிருந்து ஒருவர் வருகிறார். இனி நடக்கப் போவதை மட்டும் பாருங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஊரை கொள்ளையடித்த சசிகலா வருகிறார் என அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூறுகின்றனர். அவர் யார் ஆட்சியில் கொள்ளை அடித்தார்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சசிகலா சிறைக்கு சென்றதால் அவரை ஏ2 குற்றவாளி என அவர்கள் கூறுகின்றனர். அப்படியானல் ஏ1 குற்றவாளி யார்? என்று கேட்டுள்ளார்.

Categories

Tech |