Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால்…. அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் – கமலஹாசன்…!!

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் நான் அரசியலுக்கு வைத்திருக்க மாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தமிழகம் வெற்றி நடை போட்டு இருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழகம் வெற்றி நடை போட வில்லை. தமிழகம் ஊழலின் இருப்பிடமாக இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. விரைவில் தமிழகத்தை நம்பர் மாநிலமாக மாற்றுவோம் என்றார். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாகவும்  கூறியுள்ளார்.

Categories

Tech |