கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வகையில் அவர் அணிந்த சிலுவையுடன் கூடிய ஆடை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆடையை அணிந்து பிகில் படம் பார்க்க வருபவர்களிடம் ருத்ராட்சம் வழங்கப்படும் என்று அகில பாரத இந்து மகாசபா கட்சி அறிவித்துள்ளது.திருச்சியில் அகில பாரத இந்து மகாசபா கட்சியின் ஆலோசனைக் கூட்டம், அதன் மாநிலத் தலைவர் சுபாஷ் சுவாமிநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது,
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படம் திரைக்கு வரவுள்ளது. இதில், கிறிஸ்தவ மதத்தை பரப்பும் வகையில் அவர் அணிந்த சிலுவையுடன் கூடிய ஆடை தமிழகத்தில் பல்வேறு கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் விஜய் தன்னுடைய மதத்தை பரப்புவது போன்ற செயலை செய்கிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம். திரையரங்குக்கு ‘பிகில்’ படத்தில் விஜய் அணிந்திருப்பது போன்று உடை அணிந்து வருபவர்களுக்கு அகில பாரத இந்து மகாசபா சார்பாக ருத்ராட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.