நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒரு பலன் உண்டு என முன்னோர்கள் சொல்வதுண்டு.அன்றைய நாளில் மிகவும் உள் மனதில் பதிந்த ஒன்று கனவாக வெளிப்படும் என்கிறார்கள்.
கனவின் மூலமாக எது வெளிப்பட்டாலும் அதற்கு ஒரு அர்த்தமும், கனவில் தோன்றியதில் இதுதான் நடக்க போகிறது என்ற யூகத்தினை முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் நம் கனவில் வருவதால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக நன்மை நிறைந்த செயல்கள் நடக்கும். வரவுகள் அதிகமாக வரும். வேலை இல்லாமல் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
உடல் நோயால் மிகவும் அவதிப்படுவோர் குழந்தை உருவத்தினை கனவில் கண்டால் கண்டிப்பாக நோயிலிருந்து விடுபடலாம். இடம் அல்லது வீட்டிற்கு பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு கிடைக்கும்.
அதுவே நம் கனவில் குழந்தை அழுவது போன்று வந்தால் சிறிய பிரச்சனைகள் ஏற்படும். உடலில் ஏதேனும் நோய்கள் வருவதற்கான அறிகுறியாகும். அடுத்து தேவையற்ற செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும். செய்யாத காரியத்திற்கு பழியினை ஏற்றுக்கொள்வது போன்று வரும்.