ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் தயாராக வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கொரோனா ஆபத்து நீங்கும் வரை மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கை நீட்டித்தால் ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,993 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 73 நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 லிருந்து 35,043 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,074 லிருந்து 1,147- ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,325 லிருந்து 8,889 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமாகவே இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.