ஊழியர்களின் விவரங்கள் சரியாக பதிவு செய்யப்படாவிட்டால் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக பதிவு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கல், வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை சரியான முறையில் பதிவு செய்யப்படுவதையும், ஒப்புதல் அளிப்பதையும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.