Categories
லைப் ஸ்டைல்

வீட்டில் அகல் விளக்கு இந்த திசையில் ஏற்றினால்…. நன்மை கிடைக்குமா…? கடன் பெருகுமா…??

அகல் விளக்கு ஏற்றினால் என்ன நன்மை நடக்கும் எந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

நம் வீட்டில் பூஜை என்றால் அதில் முக்கியமான இடத்தை பிடிப்பது நாம் ஏற்றும் விளக்கு. விளக்கானது அறிவு, நேர்மறை சக்தி, ஆற்றல் போன்றவற்றின் அடையாளமாக இருக்கிறது. மேலும் மண்ணால் செய்யப்பட்ட விளக்கு வீட்டில் ஏற்றுவது புனிதமாக கருதப்படுகிறது. தினமும் விளக்கு ஏற்றுவது நம் வாழ்க்கையில் இருக்கும் இருள், அறியாமை, எதிர்மறை சக்திகளை விரட்டும் என்று நம்பப்படுகிறது. அகல் விளக்கு ஏற்றினால் என்ன நன்மை நடக்கும் எந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

கிழக்கு: இந்த திசை நோக்கி விளக்கு ஏற்றினால் நம்மைப் பின் தொடரும் துன்பங்கள் விலகும் சமூகத்தில் நல்ல மதிப்பும் பணமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேற்கு: மேற்கு திசையில் அகல் விளக்கு ஏற்றினால் உறவுகளின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிலுள்ள கடன் தொல்லைகள் எல்லாம் நீங்கும்.

வடக்கு: வடக்கு திசையில் அகல் விளக்கு ஏற்றினால் வீட்டில் மங்களகரமான செயல்கள் நடக்கும். செல்வம் பெருகும்.

தெற்கு: இந்த திசை நோக்கி அகல் விளக்கு ஏற்றினால் எதிர்பாராத தொழில் கடன் சுமை மற்றும் எதிர்மறை தாக்கங்களை அதிகரிக்கும்.

பஞ்சு திரி விளக்கு ஏற்றுதல் வாழ்க்கையில் சுபம் கூடும்.

வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

Categories

Tech |