நம்பர்-1, நம்பர்-2 சிக்னல் கொடுத்தால் மத்திய பிரதேசம் காங்கிரஸ் அரசை 24 மணி நேரத்தில் கவிழ்ப்போம் என்று அம்மாநில பாஜக தலைவர் கோபால் பார்கவா கூறியுள்ளார்.
கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க இருக்கின்றது.
இதை தொடர்ந்து பாஜக மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க போவதாக பேசப்பட்டு வந்தது. மேலும் நம்பர்-1, நம்பர்-2 சிக்னல் கொடுத்தால் போதும் 24 மணி நேரங்களில் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசை கவிழ்த்து விடுவோம் என்று அம்மாநில பாஜக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவா கூறியுள்ளார். அங்கு எதிர்க்கட்சி பாஜக ஆளும் காங்கிரஸை விட ஒற்றை எண்ணிக்கையிலான உறுப்பினர்களே குறைவாக உள்ளனர்.