Categories
அரசியல் மாநில செய்திகள்

”சொந்தம்னு” தமிழக அரசு அறிவிச்சா…. நாடு குடி மூழ்கி போய் விடாது…. C.Mயை சீண்டும் கம்யூனிஸ்ட்கள்!!

கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம்,  புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  கோவிலில் இருக்கும் சாமிகளுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் நாம் கதறுவதை பார்த்து அந்த சாமியே இரக்கப்பட்டு கோவிலிடங்களில் நீண்ட நாட்களாக குத்தகைக்கு இருப்பவர்களுக்கு பட்டா வழங்கியிருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

கோவில் நிலத்தில் ஒரு சென்டின் நிலம் கூட யாருக்கும் பட்டா கொடுக்கக் கூடாது என நீதிபதி கூறுவதற்கு என்ன அருகதை இருக்கிறது ? என கடுமையாக சாடிய கே பாலகிருஷ்ணன், இதுபோன்று அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது நீடித்தால்,  வரும் காலங்களில் தலைமுடி என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை கூட நீதிமன்றம் தான் முடிவு செய்யும் என விமர்சித்தார்.

எனவே கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்றால் முதலாவது சென்னை உயர்நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும் என குறிப்பிட்டு இருக்கும் அவர்,  கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அந்த இடம் அவர்களுக்கே சொந்தம் என தமிழக அரசு அறிவித்தால்,  நாடு ஒன்னும் குடிமூழ்கி போய்விடாது என காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

அவ்வாறு தமிழக அரசு பட்டா எழுதி கொடுத்தால் 5 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும், அதன் மூலம் 25 லட்சம் வாக்குகள் கிடைத்தால் திமுகவிற்கு தான் அது நல்லது என்றும் கே. பாலகிருஷ்ணன் அட்வைஸ் கூறியிருக்கிறார்

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே. பாலகிருஷ்ணனிடம் நீதிபதியை அவமதிக்கும் வகையில் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,  நீதிபதிக்கு அருகதை இல்லை என தான் கூறவில்லை என்றும்,  அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்பதுதான் தமது வார்த்தையின் அர்த்தம் எனவும் கூறியிருக்கிறார்.

செய்தியாளர்கள் மூன்று முறை கேள்வி எழுப்பிய போதும், அத்தனை முறையும் பூவை பூ என்றும் சொல்லலாம்,  புஷ்பம் என்றும் சொல்லலாம் என்பது போல மழுப்பலான பதிலை கூறிவிட்டு,  பாலகிருஷ்ணன் கிளம்பினார். நீதிபதியை அவமதிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |