தமிழக அரசு தளர்வுகள் அறிவித்தால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டமாக குவிந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்ததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதிய ரயில்வே சாலை பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிகமாகவர்கள் இறைச்சி, மீன் வாங்குவதற்காக அங்கே கூட்டமாக குவிந்துள்ளனர். இதனையடுத்து இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.