Categories
அரசியல் மாநில செய்திகள்

கடவுள் அருள் இருந்தால் கேப்டன் வருவார் – பிரேமலதா பரபரப்பு பேச்சு …!!

தேமுதிக சார்பில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் ஒப்பற்ற தலைவராக நமது தலைவர் இருக்கிறார். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார். எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து வந்ததில்லை தேமுதிக. சுயமாக உருவாகி லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக என் மக்களை வறுமை கோட்டிற்கு கீழிருந்து கொண்டு வந்து, என் மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று சொன்ன ஒரே ஒரு உத்தம தலைவர் நமது கேப்டன் அவர்கள்.

தேசம் தோறும் வீடுகளில் வறுமை ஒழிப்பு என்று சொன்ன ஒரே ஒரு உத்தம தலைவர் வேறு யாராவது சொன்னார்களா ? தாய்க்குலங்களை நீங்கள் எல்லாரும் யோசிக்கணும். ஆயிரத்தையும் கொடுத்து உங்களை எல்லாம் ஏமாற்றும் இந்த ஏமாற்று அரசியல்வாதிகள் யார் ? உண்மையான தலைவர் யார் ? தமிழ்நாட்டில் நீங்கள் முடிவு செய்யுங்கள்.

இன்னைக்கு எங்க கேப்டன் வந்தா அவர்தான் முதலமைச்சர் அப்படின்னு சொல்றீங்களா ? கடவுள் அருள் இருந்தால் வருவார். அன்னைக்கு நீங்க கேப்டனுக்கு ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்குறிங்களா அப்படின்னு பார்ப்போம்.  தில்லு முல்லு செய்கின்ற அளவுக்கு இன்னும் நம்மளை வளர்த்துக்கள,  நாங்கள் துரோகிகளையும், எத்தனையோ தோல்விகளையும், எத்தனையோ ஏமாற்றங்களையும் இன்றைக்கு கடந்து  தேமுதிக 18 வது ஆண்டில இருக்கு. ஆனா பொறுத்திருங்க இந்த நிலை மாறும் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

Categories

Tech |