அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, என்ன நடக்குது இன்னைக்கு தமிழ்நாட்டில் ? வாட்ஸ் அப்ல எல்லாம் போட்டு இருந்தாங்க. நல்லா இருந்தது புலம்பி இருக்கார் ஸ்டாலின் மேடையில பொதுக்குழுவுல… இது தாங்க எங்க அம்மா ஆட்சிக்கும், உங்க ஆட்சிக்கும் இருக்கிற வித்தியாசம்.
எங்க அம்மா மேடையில இருந்தா பின் டிராப் சைலன்ட்னு சொல்லுவோமே….. குண்டு ஊசி கூட கீழே விழ முடியாது அப்படி ஒரு கட்டுக்கோப்புடன் அந்த மக்கள் அங்க நிப்பாங்கன்னா… அதற்கு உரிய தலைவி புரட்சித்தலைவி அம்மா. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு நடந்தது ? எவ்வளவு அமைதியா நடந்தது. தலைமை எவ்வழியோ, தொண்டர்கள் அவ்வழி. புலம்பறாரு பாவம் மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்கள்…
என்ன தூங்க விடாம பண்ணிட்டீங்களே.. என் உடம்ப பாருங்க, நான் எப்படி ஆயிட்டேன்னு ? பொன்முடி சிரிக்கிறாரு. யோவ் நீ தூங்கலனா, நான் என்ன பண்ண முடியும் ? உனக்கு உடம்பு சரியில்ல, தூக்கம் வரல என்றால் அதுக்கு நானா பொறுப்பு அப்படின்ற மாதிரி சிரிக்குறாரு.ஆயிரம் இருந்தாலும் அவரோட அப்பா காலத்துல இருந்தே பொன்முடி இருக்கலாம், அது வேற விஷயம். அமைச்சராக இருக்கலாம் அது வேற விஷயம். கட்சியினுடைய தலைவர் பேசுகிறார்…
இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசுறாரு… அதுக்கு கூடவா நீங்க மரியாதை கொடுக்க மாட்டீங்க? அப்படி ஒரு சிரிப்பு சிரிக்கிறீங்களே.. விடியல் ஆட்சி, விடியல் ஆச்சுன்னு சொல்லி என்ன விடிய விடிய தூங்க விடாம விட்டுட்டீங்களேப்பா என்று புலம்பி தள்றாரு ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.