தமிழகத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க நிர்ப்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவெளியில் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.சட்டசபையில் உங்களை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசினாலும் பொறுமையாக இருங்கள். முதலில் மக்களின் பிரச்சனைகளை கவனியுங்கள்.அமைச்சரவையை மாற்றம் செய்ய நிர்பந்தம் ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.