உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தரும்படி வானதி சீனிவாசனுக்கு மா சுப்பிரமணியன் பதில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதலில் சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது சென்னையில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. அதற்கு மாறாக கோவை மாவட்டத்தில் கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கோவையை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டி இருந்த நிலையில், கோவை மக்கள் மீது வானதி ஸ்ரீனிவாசன் இங்கு உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத் தரும்படி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.