ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. தமிழை ஒரு கண்ணாகவும், ஆங்கிலத்தை மறு கண்ணாகவும் நான் எப்படி புரிந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ? தாய் மொழியாகிய எங்கள் தமிழை, வாழ்வுக்கானது என்று நினைக்கிறோம். ஆங்கிலத்தை எப்படி நினைக்கிறோம் தெரியுமா ? வசதிக்கானது என்று நினைக்கிறேன். வாழ்வுக்கான மொழி தாய்மொழி, வசதிக்கான மொழி ஆங்கில மொழி. நாங்கள் வாழ்வோடும் இருப்போம், வசதியோடும் இருப்போம்.
தமிழையும் – ஆங்கிலத்தையும் படித்தால், இந்தியை படித்தால் ஊமையர்களாக, வாய் பேச முடியாதவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு இது வழி செய்கிறது. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. சரி பயிற்று மொழி இந்தி என்று வந்துவிட்டால், மெல்ல மெல்ல ஆங்கிலத்தை நீங்கள் அகற்ற பார்க்கிறீர்கள். ஆங்கிலத்தை அகற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் 200, 300 ஆண்டுகளாக ஆங்கிலத்தோடு இந்த தேசம் பயின்று வந்திருக்கிறது.
ஆங்கிலம் எங்களுக்கு ஒன்றும் அந்நிய தேசத்து மொழி தானே தவிர, அறியாத மொழி அல்ல. அந்நிய தேசத்து மொழி ஆங்கிலம், அறியாத மொழி அல்ல, அறிந்த மொழி. உள்நாட்டு மொழி தான் இந்தி, அறியாத மொழி. அந்நிய மொழி, எங்களுக்கு அணுக முடியாத மொழி. ஆகவே தோழர்களே நான் உங்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம்… இந்த பரிந்துரைகள் நமக்கு வெற்று உரைகளாக தோன்றுகின்றன. இந்த பரிந்துரைகளை நாம் புறம் தள்ள வேண்டியது நமது கடமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.